தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய நபரை தட்டித் தூக்கிய என்ஐஏ அதிகாரிகள்!
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்பில் முக்கிய நபர் பைசல் உசைன் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்பில் முக்கிய நபர் பைசல் உசைன் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி முதல் முறையாக 6 நாட்கள் கஷ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அதே 6 நபர்களை இரண்டாவது முறையாக என்ஐஏ அதிகாரிகள் ஐந்து நாட்கள் போலீஸ் கஷ்டடி எடுத்துள்ளனர்.
போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பைசல் உசைன் என்ற நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பைசல் உசேன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட டாக்டர் ஹமீது ஹுசைனின் சகோதரர் ஆவார்.
பைசல் உசைன் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்பின் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்து வருவதும் அவருக்கு அடுத்தபடியாக அவரது சகோதரர் ஹமீது உசேன் இருந்து வந்ததும் அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது பைசல் உசேன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைசல் உசைன் தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பல்வேறு நாடுகளில் தொடர்பில் இருப்பது ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?