துணை முதல்வர்.. புதிய அமைச்சர்கள்.. தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்..
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதாகவும், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
மேலும், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் மற்றும் கே.ராமசந்திரன் அமைச்சவையில் இருந்து நீக்கப்பட்டு, பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மெய்யநாதன், மதிவேந்தன் மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோரின் துறைகளும் மாற்றி மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக அமைச்சரவை சேர்க்கப்பட்டவையில் சேர்க்கப்பட்டவர்களுக்கான பதவியேற்பு விழா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் முதலாவதாக சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரனுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்று கொண்டார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் கொறடாவாக இருந்த திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., கோ.வி.செழியன் அமைச்சராக பதவியேற்றார்.
பின்னர் ஆவடி சா.மு.நாசருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில் அவர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இருந்த அதே மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரனுக்கு சுற்றுலா துறையும், அரசின் கொறடாவாக இருந்த கோ.வி.செழியனுக்கு உயர்கல்வித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, துணை முதல்வரக உதயநிதி, புதிய அமைச்சர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், புதிய அமைச்சர்களுக்கு துறை ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அறிவுரை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால், இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?