உதயநிதி துணை முதலமைச்சரானால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

 உதயநிதி துணை முதலமைச்சர் ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு விடுமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 19, 2024 - 14:18
 உதயநிதி துணை முதலமைச்சரானால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் வளையங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் திட்டத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சின்ன  உலகாணி கிராமத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு பக்கம் வெயில் கொடுமை இருந்தாலும், மறுபுறம் நாட்டில் யார் துணை முதலமைச்சராக வரவேண்டும் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு வெயிலின் கொதிநிலைபோல, திமுகவில் யார் துணை முதலமைச்சர்  என்கிற கொதிநிலை விவாதம் நடைபெற்று வருகிறது.”

மேலும், ”தமிழகத்தில் கொலைகள் நடைபெறாத நாட்களே இல்லை, சிவகங்கையில் கூட ஒரே நாளில் மூன்று கொலைகள் நடைபெற்று உள்ளது. இன்றைக்கு உதயநிதியை மக்கள் பேசப்பட வைக்க வேண்டும் என்றும், தமிழகம் உதயநிதியை சுற்றுவது போல உருவாக்கி வருகிறார்கள். முதல் தடவை எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என்று சினிமாவில் வருவதை போல உருவாக்க நினைக்கிறார்கள். இது ஜனநாயகத்தை அச்சப்படுத்துவது போல் உள்ளது.”

75 ஆண்டு திமுக அரசியல் வரலாற்றில் 25 முறை தான் திமுக ஆட்சி செய்தது .அண்ணா ஆட்சி உருவாக்கியதை தவிர்த்து மற்றவை எல்லாம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி  திமுக ஆட்சிக்கு வந்தனர். அண்ணாவின் கொள்கைகளை இன்றைக்கு திமுக குழி தோண்டி புதைத்து வருகிறது, அண்ணா வாரிசுக் கொள்கைகளை எதிர்த்தார். ஆனால் அதை திமுக செயல் படுத்தி வருகிறது. அண்ணா எதையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் வழி நடத்தி திமுக செயல்படுத்தி வருகிறது.”

 தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதி துணை முதலமைச்சர் ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு விடுமா? மின்சார கட்டணம் குறைந்து விடுமா? சொத்து வரி குறைந்து விடுமா, பால் விலைகுறைந்து விடுமா? பத்திர பதிவுகட்டணம் குறைந்து விடுமா? இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளைகளுக்கு பதில் சொல்ல உதயநிதி முன்வருவாரா? 

 தற்பொழுது மழை பொய்து விட்டது இன்னும் இரண்டு நாட்களில் மழை பெய்தால் தான் பயிர்கள் தப்பிக்க முடியும் இல்லையென்றால் பயிர்கள் கருகிவிடும் அப்படி கருகும் சூழ்நிலை ஏற்பட்டால் அரசு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும்”, என ஆதங்கத்துடன் பேசினார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow