பவதாரிணியின் இழப்பு.. மௌனஞானியான இளையராஜா.. கங்கை அமரன் உருக்கம்

விஜய்யின் தி கோட் படத்தில் பாடல் எழுதியுள்ளது குறித்து கங்கை அமரன் கொடுத்துள்ள அப்டேட் வைரலாகி வருகிறது. அதேபோல், பவதாரிணி மறைவு குறித்தும் மிக உருக்கமாக பேசியுள்ளார் கங்கை அமரன்.

Jul 6, 2024 - 11:58
Jul 6, 2024 - 12:17

விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. 

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் அண்மையில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்தப் பாடலில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசைக்கோர்வை பொறியாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் சேத்தன் என்பவர்தான்  இதை சாத்தியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், பவதாரிணி  குறித்து கங்கை அமரன் உருக்கமாக பல விஷயங்களை கங்கை அமரன் கூறியுள்ளார். அதாவது, பெங்களுருவில்  கோட் படத்தில் இந்த பாடல் பவதாரிணிக்காக கம்போஸ் செய்து முடித்த போதுதான், மலேசியாவில் பவதாரிணி இறந்து போய் விட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கங்கை அமரன் உருக்கமாக தெரிவித்துள்ளார். ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட பவதாரிணியின் குரலை கேட்ட அண்ணன் இளையராஜாவின் கண்கள் குளம் போல மாறி விட்டதாகவும் கங்கை அமரன் உருகியுள்ளார்.

பவதாரிணி இறந்த போது, அதனை தாங்க முடியாத அண்ணன் இளையராஜா, எல்லாம் போய் விட்டதே என்று தலையில் கைவைத்து விட்டதாகவும், அதன் பிறகு அவர் ஒரு மௌனஞானி போல மாறி விட்டதாகவும் கங்கை அமரன் கூறியுள்ளார். மேலும், பவதாரிணிக்கு புற்று நோய்தான் தாக்கியுள்ளது என்பது கூட தெரியாமல் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும், காரசாரமா நீ சாப்பிடுற... அதான் உனக்கு இப்படி வயிறுல பிரச்னை வருதுனு கூறி தான் சமாளித்ததாகவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். வீட்டில், அனைவருக்கும் பவா செல்லம் என்றும் அந்த இழப்பை இப்போது வரை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கங்கை அமரன் வேதனையுடன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow