“வெங்கட் பிரபு அப்படிலாம் பண்றார்..” கங்கை அமரனிடம் அழுது தீர்த்த விஜய்? கோட் ஸ்பெஷல் அப்டேட்!

விஜய்யின் தி கோட் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து, வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் குமுதம் சேனலுக்கு கொடுத்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Jul 5, 2024 - 17:48
Jul 5, 2024 - 17:49
“வெங்கட் பிரபு அப்படிலாம் பண்றார்..” கங்கை அமரனிடம் அழுது தீர்த்த விஜய்? கோட் ஸ்பெஷல் அப்டேட்!

சென்னை: இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என மினிமம் பட்ஜெட் சகலகலா வல்லவனாக வலம் வருபவர் கங்கை அமரன். இளையராஜாவின் சகோதர், வெங்கட் பிரபுவின் அப்பா என இன்னொரு முகமும் இவருக்கு உள்ளது. எதையும் ஓபனாக உடைத்து பேசும் கங்கை அமரன், சமீபத்தில் குமுதம் யூடியூப் சேனலுக்கு எக்ஸ்க்ளூஸிவாக பேட்டிக் கொடுத்திருந்தார். அதில் வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் திரைப்படம் குறித்து அவர் பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

தி கோட் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. இதனைத் தொடர்ந்து வெளியாகவுள்ள கோட் படத்தின் பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தத்துவ பாடலா என கங்கை அமரனிடம் கேட்டபோது, நமக்கு எப்படி தத்துவ பாடல் தர போறாங்க... அது குத்து பாடல் தான் எனவும், அதனை தானே பாடியுள்ளதாகவும் கூறினார். அந்தப் பாடலை கேட்டு நல்லா இருக்கு என விஜய் பாராட்டியதையும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் தி கோட் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் அடிக்கடி போனில் பேசிக்கொள்வேன் எனக் கூறிய கங்கை அமரன், அப்போதெல்லாம் வெங்கட் பிரபு ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை பிழிந்து எடுக்கிறார் என விஜய் விளையாட்டாக கம்ப்ளைன்ட் செய்வார் எனக் கூறினார். அதேபோல், தி கோட் நீங்க நினைப்பது மாதிரி ஆக்ஷன் ஜானர் மூவி இல்லையென்றும், இது பக்கா ஃபேமிலி சப்ஜெக்ட் என்றும் இதுவரை தெரியாத ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். அதற்கு மேல் தி கோட் படத்தின் கதை குறித்து பேசவே முடியாது என சிரித்துக்கொண்டே எஸ்கேப் ஆகிவிட்டார்.

இந்தப் பேட்டியில் மறைந்த பவதாரிணியின் மறைவு குறித்தும் மிக உருக்கமாக பேசியுள்ளார் கங்கை அமரன். அதில், பவதாரிணிக்கு கேன்சர் இருந்தது அவருக்கே தெரியாது, வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்தவளுக்கு இப்படி நடக்கணுமா எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், தி கோட் படத்தில் பவதாரிணி குரலை ஏஐ பயன்படுத்தி ஒரு பாடல் பாட வைத்தது பற்றியும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் கங்கை அமரன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow