வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி பரபரப்பு புகார்

Apr 16, 2024 - 19:18
வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி பரபரப்பு புகார்

திருமணத்தைத் தாண்டிய உறவு காரணமாக தங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

 தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர் ஜாக்குவார் தங்கம். இவர் கடந்த 1984-ல் சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஜாக்குவார் தங்கம் சென்னை எம்.ஜி.ஆர். நகர் அண்ணல் காந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு கிருஷ்ணன் மற்றும் ஜெய் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் சாந்தி தனது கணவர் ஜாக்குவார் தங்கத்தின் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், 23 வயது இளம்பெண் ஒருவருடன் ஜாக்குவார் தங்கம் தவறான உறவில் இருப்பதாகவும் சமீப காலங்களில் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தங்களுடன் சண்டையிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதன் தொடர்ச்சியாக நேற்று (ஏப்ரல் 15)  அந்தப் பெண்ணை அழைத்து வந்து, தன்னையும் தனது மகன்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக சாந்தி குற்றம்சாட்டியுள்ளார். எனவே தனது கணவர் ஜாக்குவார் தங்கம் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow