”திமுக – பாஜக கள்ள உறவு… அண்ணாமலை ஓடிப்போனவர்..” – காயத்ரி ரகுராம் காட்டம்!

திமுகவும் பாஜகவும் கள்ள உறவு வைத்துள்ளதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓடிப்போனவர் என்றும் அதிமுகவின் மகளிர் அணி இணைச் செயலாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

Oct 18, 2024 - 15:04
”திமுக – பாஜக கள்ள உறவு… அண்ணாமலை ஓடிப்போனவர்..” – காயத்ரி ரகுராம் காட்டம்!

அதிமுகவின் 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில் கேரம் போர்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 36 அணிகள் கலந்து கொண்ட நிலையில் இன்று சென்னை தி.நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுகவின் மகளிர் அணி இணைச் செயலாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அதிமுகவின் திட்டங்களை பின்பற்றிய திமுக தற்பொழுது செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்கள் திமுகவால் எந்த நிலையிலும் போட முடியாது. 

கனமழை என ஊடகங்கள் மற்றும் திமுகவினர் மட்டும் தான் சொல்கிறார்கள். ஆனால் கள எதார்த்தம் அப்படி கிடையாது. இரண்டு மணி நேரம்தான் கனமழை பெய்தது. அதைக் கூட இந்த மழை நீர் வடிகால்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. டீ வாங்கி கொடுத்து போட்டோ எடுப்பது மட்டும் வேலை இல்லை. 

திமுக மற்றும் பாஜக கள்ள உறவில் இருக்கிறார்கள். அதிமுகவில் பூசல் வரவேண்டும் என திமுக பாஜக இணைந்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா மூலமாக சூழ்ச்சி செய்கிறார்கள்” காயத்ரி ரகுராம் என குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து பேசிய காயத்ரி ரகுராம், அண்ணாமலை ஓடிப்போனவர் அவரைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை அவரை ஒரு தலைவராகவே நான் என்றைக்கும் கருதியதில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow