மது போதையில் சண்டையிட்ட வட மாநிலப் பெண்கள்
மது போதையில் இரு வட மாநிலப் பெண்கள் சட்டையிட்டு, கெட்ட வார்த்தைகளால் பேசிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் பிரதான சாலையில் இரண்டு வட மாநிலப் பெண்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பொழுது அவ்வழியே ரோந்து வாகனத்தில் வந்த பள்ளிக்கரணை போலீசார் சண்டையிட்டுக் கொண்டு இரு பெண்களை சமாதானப்படுத்தி விட்டனர். இருவரும் அதிகளவு போதையில் இருந்ததால் சண்டையைத் தடுக்க சென்ற போலீஸாரிடம் கெட்டவார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது அவர்களில் ஒரு வட மாநில பெண் தள்ளாடிய படியே அங்கிருந்து சாலையில் செல்ல முயற்சி செய்தார் பொதுமக்களும் போலீசாரும் அப்பெண்ணைத் தடுக்க முயன்ற போது அவர்களிடமும் ரகளையில் ஈடுபட்டார். சம்பவம் நடைபெற்றது மேடவாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் பள்ளிக்கரணை போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். இரவு நேரம் என்பதால் காவல் நிலையம் அழைத்துச் செல்ல முடியாது என்பதற்காக
பெண்ணின் செல்போனில் நண்பர்களின் எண்ணைத் தொடர்பு கொண்டு வரவழைத்து பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
வட மாநில இரு பெண்கள் போதையில் சாலையில் சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
What's Your Reaction?