சிறுமியை சின்னாப்பின்னமாக்கிய வீரமணி.....சிக்கிய வீடியோ!

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுமியின் ஆபாச வீடியோ காவல் துறையினரிடம் சிக்கியுள்ளது.

Sep 22, 2026 - 17:29
Sep 22, 2026 - 17:35
சிறுமியை சின்னாப்பின்னமாக்கிய வீரமணி.....சிக்கிய வீடியோ!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஏற்கெனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது முன்னாள் உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

84 வயதான ஜெம் குழுமத் தலைவர் வீரமணி, சிறுமி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வீரமணியிடம் சுமார் 23 ஆண்டுகளாக உதவியாளராகப் பணியாற்றிய கணேசனை சென்னை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த செல்போனில் வழக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் வீடியோ இருந்ததாகவும், அது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்டிரைவில் இருந்த வீடியோ... தொடங்கிய விசாரணை

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளிக்கப்பட்ட ரகசிய புகாரைத் தொடர்ந்து தொடங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவின் பாலியல் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரைத் தொடர்புகொண்டு புகார் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பென்டிரைவ் ஒன்றை வழங்கியதாகவும், அதில் சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றக் காட்சிகள் இருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தி, சில ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது.

போலீஸ் காவலில் விசாரணை

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வீரமணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 84 வயதான அவரை வெளியே அழைத்து வந்து விசாரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, சிறப்பு அனுமதி பெற்று புழல் சிறையிலேயே போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கணேசனிடம் தொடரும் விசாரணை

வீரமணிக்கு நெருக்கமானவராகவும், நீண்டகால உதவியாளராகவும் இருந்த கணேசனிடம் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ தொடர்பாகவும், அது எவ்வாறு அவரிடம் வந்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

குறிப்பாக, வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அந்த வீடியோவை கணேசனுக்கு அனுப்பியது யார்? அது எப்போது அவருக்கு அனுப்பப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு போலீஸார் பதில் தேடி வருகின்றனர்.

மேலும், வீரமணியுடன் நீண்ட காலமாகப் பணியாற்றியவர் என்பதால், வழக்கு தொடர்பாக கணேசனுக்கு தெரிந்த தகவல்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாக மேலும் யாரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், இன்னும் விசாரணையின் போது பல தகவல்கள் வெளியாக உள்ளது என்று காவல் துறை விசாரணையின் போது தெரிய வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow