நாளுக்கு நாள் ஏறும் தங்கத்தின் விலை... நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jul 3, 2026 - 10:37
Jul 3, 2026 - 10:38
நாளுக்கு நாள் ஏறும் தங்கத்தின் விலை... நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி!

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று (ஜூலை 2) ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இருமுறை அதிரடி மாற்றம் கண்டது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் ரூ.1,200 அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம், நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,08,400-க்கு விற்பனையானது.

நேற்றைய அதிரடி விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று 3-வது நாளாகத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதன் மூலம், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,09,600 என்ற விலையில் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து, ரூ.13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 அதிரடியாக உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2.60 லட்சம் ஆகவும் விற்பனையாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow