தங்கம் விலை இன்று: ஒரே நாளில் அதிரடி மாற்றம்... ஷாக்கில் பெண்கள் !

தங்கம் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... காலையில் சரிந்து, மாலையில் மீண்டும் உயர்ந்த விலை நிலவரம் இதோ!

Sep 11, 2026 - 19:00
தங்கம் விலை இன்று: ஒரே நாளில் அதிரடி மாற்றம்... ஷாக்கில் பெண்கள் !
Gold & Silver Rate Today

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று உயர்வை பதிவு செய்த நிலையில், இன்று காலை அதிரடியாக குறைந்தது. பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
 
நேற்று தங்கம் விலை நிலவரம் :

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.110 அதிகரித்து ரூ.14,255-க்கு விற்பனையானது.

இன்று காலை தங்கம் விலை சரிவு :

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் சரிவு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை :

காலையில் சரிவை சந்தித்த தங்கம் விலை, மாலை நேரத்தில் மீண்டும் ஏற்றம் கண்டது. அதன்படி, சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை நேரத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்த நிலையில், மாலையில் ரூ.5 உயர்ந்துள்ளது.

இதையடுத்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்கள், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow