கனமழை எச்சரிக்கை: மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைப்பு
ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக வடசென்னை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி லோகநாதன் தெரிவித்துள்ளார்.
தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மீட்பு படகுகளை முன்கூட்டியே நிறுத்தி வைத்துள்ளதாக தீயணைப்பு துறை வடசென்னை மாவட்ட அதிகாரி லோகநாதன் தெரிவித்துள்ளார்.
பருவ மழையை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதேபோல வெள்ள பாதிப்புகள் இருந்தால் பொதுமக்களை மீட்கவும், பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யவும் தமிழக தீயணைப்பு துறை தயார் நிலையில் இருக்கிறது. அதற்காக சென்னைக்கு வெளி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
கனமழை எச்சரிக்கையை ஒட்டி தீயணைப்பு துறையினர் உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள், மீட்புப்படை படகுகள் என அனைத்தையும் தயார் செய்து வைத்துள்ளனர்.இதற்காக ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக வடசென்னை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி லோகநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த பகுதிகளில் ரப்பர் படகுகளை முன்கூட்டியே நிறுத்தி வைத்து பாதிப்பு இருந்தால் உடனடியாக பொதுமக்களை மீட்கவும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்யவும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?