2026 பேரவைத் தேர்தலுக்கு முதல் ஆளாக களத்தில் இறங்கிய திமுக..வெளியான லிஸ்ட்!

234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட திமுக தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளது.

Oct 8, 2024 - 09:09

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பாக உள்ளது. இதற்காக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சீரமைப்புகள் தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

இந்த விவரம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow