நல்லத்துக்குடி கிராமத்தில் சிறுத்தையின் கால் தடம்... பதற்றத்தில் மக்கள்..!
மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி... வாக்கிங் செல்வதை தவிர்க்க அப்பகுதியினருக்கு வனத்துறை அறிவுறுத்தல்..
நல்லத்துக்குடி ஊராட்சி பழைய ரயில்வே தடத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது.
நல்லத்துக்குடி ஊராட்சி பழைய ரயில்வே தடத்தில் அடியக்கமங்கலம் என்ற இடத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்ததாக தார் பிளாண்ட்டில் பணியாற்றும் ஹரிஹரன் என்ற இளைஞர் வனத்துறைக்கு தகவல் அளித்தார்.பின்னர் அந்த தகவலின்படி வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான கால் தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தெர்மல் டிரோன் மற்றும் தெர்மல் கேமரா கொண்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் காலை வாக்கிங் செல்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியை கடந்து தஞ்சாவூர் மாவட்டத்தை சென்றடைந்து விட்டது என்று கருதப்பட்டது. இந்நிலையில் திடீரென மீண்டும் 25 கிலோமீட்டர் பின்னோக்கி சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?