திருநீறுக்கு இவ்வளவு மகிமையா? நரகத்தை சொர்க்கமாக மாற்றிய திருநீறு!
திருநீறு, விபூதி, கல்பம், அணுகல்பம், உபகல்பம், பசிதம், ரட்சை, அகல்பம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் புனித பொருளாக உள்ளது. சைவ சமயங்களில் திருநீற்றை நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.

திருநீறின் வரலாற்றை அரிய ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. அதில், ஒருநாள் துர்வாச முனிவர் காலை வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு பித்ருலோகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்படி, அவர் செல்லும் வழியில் ஒரு பெரிய கிணறு இருந்துள்ளது. அந்தக் கிணற்றை எட்டிப் பார்த்தபோது தான் தெரிந்தது அது கிணறு அல்ல, நரகம் என்று.
அந்த நரகத்தில் பல பாவம் செய்த பாவிகளை, விஷம் நிறைந்த பாம்பு, பல்லி, தேளை போன்ற கொடிய உயிரினங்கள் துன்புறுத்திக் கொண்டிருந்தன. அந்த கிணற்றை பார்த்துவிட்டு முனிவர் சென்றுவிட்டாராம். முனிவர் கிணற்றை பார்த்துவிட்டுச் சென்ற அடுத்த நொடியே பாவம் செய்தவர்கள் துன்பத்தில் இருந்து விடுதலைபெற்றனர். கொடிய விலங்குகள் அனைத்தும் பூ மாலைகளாகவும், நரகம் சொர்க்கமாகவும் மாறிவிட்டதாம்.
இதைக்கண்ட நரகத்தின் காவலர்கள், எமனிடம் நடந்ததை சொல்லி முறையிட்டனர். எமன் தேவர்களின் தலைவனாகி இந்திரனிடம் சென்று முறையிட்டார். இந்திரனும் இது என்னவென்று தெரியாமல் சிவபெருமானிடம் முறையிட்டுள்ளார்.
‘துர்வாச முனிவர், நரகத்தைப் பார்த்ததால் அது சொர்க்கமாக மாறவில்லை. அவர் நெற்றியில் பூசியிருந்த திருநீறு, அவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றுக்குள் விழுந்தது. அதனால், நரகத்தில் இருந்த பாவிகளின் பாவங்கள் கரைந்து புண்ணியம் நிறைந்தவர்களாக மாறினர். நரகமும், சொர்க்கமாக மாறிவிட்டது என்றாராம் சிவபெருமான். எப்பேற்பட்ட பாவங்களையும் கரைத்து, புண்ணியத்தை அளிக்கக்கூடிய சக்தியை கொண்ட புனித பெருளாக திருநீரு இன்றளவும் போற்றப்படுகிறது. அதனால் இந்து சமயத்தில் இன்றியமையாத பொருளாக திருநீறு உள்ளது.
What's Your Reaction?






