CM-க்கு நோ.. Eps-க்கு Yes.. பிரதமர் மோடி போடும் கணக்கு

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Apr 3, 2025 - 16:05
Apr 3, 2025 - 16:09
CM-க்கு நோ.. Eps-க்கு Yes.. பிரதமர் மோடி போடும் கணக்கு
நரேந்திர மோடி-மு.க.ஸ்டாலின்

ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டுகள் கடந்த நிலையில் மத்திய அரசு சார்பில் 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை ராம நவமியான ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்காக ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 6-ஆம் தேதி வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஏப்ரல் 5-ஆம் தேதி இலங்கைக்கு செல்கிறார். பின்னர் இவ்விழாவில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து ஏப்ரல் 6-ஆம் தேதி காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபம் முகாமிற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

ரயில் பாலத்தை திறந்து வைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

பிரதமரை சந்திக்க அனுமதி

இந்நிலையில், வரும் 6-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை மதுரையில் சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு சமீபத்தில் கடிதம் எழுதிய நிலையில் இன்னும் அனுமதி வழங்கபடவில்லை என்று கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow