கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. எட்டிபிடிக்க முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்கள்!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 57 ஆயிரத்தை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, 56 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை.
தங்கத்தின் விலை தினசரியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருசவரன் தங்கத்தின் விலையானது இன்று (அக்டோபர் 11) ரூ. 56,760 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் தங்கம் 60,000 ரூபாயை எட்ட உள்ளதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வதை பார்க்கலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதால் விலை தடாலடியாக குறைந்தது.
மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் மீண்டும் தங்கம் மளமளவென எகிறியது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. அதிலும் கடந்த 10 நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்தது. ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தத சம்பவம்லாம் நடந்தது.
தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.7,025 ஆயிரம் ரூபாயாகவும் ஒரு சவரனுக்கு 56,200 ரூபாயாகவும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.7000க்கு விற்பனையானது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 7,095க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 56,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பண்டிகை காலம் மற்றும் சுப முகூர்த்த காலங்கள் என்பதால் நகை வாங்க காத்திருந்த மக்கள் தங்கம் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா? அல்லது மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?