"நேதன்யாகுவுடன் வழக்கமான நெருக்கம்தான்.. இருந்தாலும் காசாவுக்கு உதவலாம்.." - ஜோ பைடனின் இரட்டை கருத்து
ரமலான் நெருங்கிவரும் வேளையில் போர் நிறுத்தம் அவசியமாகிறது
காசாவுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டுமென்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுடனான உறவு எப்போதும் போல் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போர், 6 மாதங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், போர் நிறுத்தத்தை மேற்கொள்ளவும், சிறை வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தி வருகிறது. மறுமுனையில், அமெரிக்கா தனது வீட்டா அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் போர் நிறுத்தத் தீர்மானங்களை ரத்து செய்து வந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனங்களைப் பதிவு செய்தன. இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்தம் தேவை என அண்மையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார்.
இந்நிலையில், காசாவுக்குள் உடனடியாக மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை ஹமாஸ் அமைப்பு சரியாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். போரை நிறுத்தி பிணைக் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், பிணைக் கைதிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் உடனான உறவு சுமூகமாகவே தொடர்கிறது என்று கூறிய அவர், ரமலான் நெருங்கிவரும் வேளையில் போர் நிறுத்தம் அவசியமாகிறது என்றும் கூறியுள்ளார்.
What's Your Reaction?