திரிஷா அம்மா! என்ன மன்னிச்சிடுங்க.. வீடியோ வெளியிட்ட ஏ.வி.ராஜு
கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெங்கடாசலம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த ஏ.வி.ராஜூ கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இதனால் விரக்தியில் இருந்த ஏ.வி.ராஜூ, கூவத்தூர் விவகாரம் குறித்தும், அதில் நடிகை திரிஷாவை குறிப்பிட்டும் கூறிய சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தனது 'X' தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.
மேலும் ஏ.வி.ராஜுவின் கருத்துக்கு நடிகைகள் குஷ்பூ, கஸ்தூரி, காயத்ரி ரகுராமான், சின்மயி, இயக்குநர் சேரன், மன்சூர் அலிகான், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் திரிஷா குறித்து பேசியதற்கு ஏ.வி.ராஜு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், திரிஷா அம்மா என்ன மன்னிச்சிருங்க, நான் பேசியது மாற்றி கூறப்பட்டுள்ளது, முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், திரிஷா மாதிரி என்று சொன்னாரே தவிர திரிஷா என்று சொல்லவில்லை என்று கூறி விளக்கமளித்துள்ளார்.
What's Your Reaction?