“பா ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களுக்கு No... மோகன் ஜி தான் Refrence” கவுண்டம்பாளையம் ரஞ்சித் ஓபன்
நாடகக் காதல் ரெஃபரன்ஸ்க்காக மோகன் ஜி இயக்கிய படங்களை மட்டுமே பார்ப்பேன் என தெரிவித்துள்ள கவுண்டம்பாளையம் இயக்குநர் ரஞ்சித், மாரி செல்வராஜ், பா ரஞ்சித் குறித்தும் காட்டமாக பேசியது வைரலாகி வருகிறது.
சென்னை: தமிழில் மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ரஞ்சித். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கவுண்டம்பாளையம் திரைப்படம் மூலம் இயக்குநராக மீண்டும் என்ட்ரியாகிறார். இந்தப் படம் கடந்த வாரமே வெளியாகவிருந்த நிலையில், சில அமைப்புகளின் மிரட்டல் காரணமாக ரிலீஸாகவில்லை. இயக்குநர் மோகன் ஜி-யின் நாடகக் காதல் பின்னணியில், தனது கவுண்டம்பாளையம் படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித். அதோடு இல்லாமல் இப்படத்தில் சில கட்சிகளையும், குறிப்பிட்ட ஒரு அரசியல் தலைவரையும் டார்க்கெட் செய்து வசனங்கள் வைத்திருந்தார்.
கவுண்டம்பாளையம் ட்ரெய்லர் வெளியான பின்னர், அதில் இடம்பெற்றிருந்த இந்த சர்ச்சையான வசனங்களால் படத்துக்கு சிக்கல் எழுந்தது. இன்னொரு பக்கம் கவுண்டம்பாளையம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் ரஞ்சித் காட்டமாக பேசி வந்தார். நான் சாதி வெறி பிடித்தவன் தான் என வெளிப்படையாகவே பேசியதால் கவுண்டம்பாளையம் படத்தின் ரிலீஸுக்கு பல அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதேபோல் இந்தப் படம் வெளியாகும் தியேட்டர்களில் போராட்டம் நடத்தப்படும் என மிரட்டல்கள் வந்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து கவுண்டம்பாளையம் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடகக் காதலை பற்றியும் அதனால் பெற்றோர்களுக்கு ஏற்படும் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் உண்மையே. இந்தப் படத்தின் வெற்றி தான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில் என காட்டமாக பேசியிருந்தார் ரஞ்சித். இந்நிலையில், இயக்குநர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர்கள் குறித்தும் ரஞ்சித் பேசியது வைரலாகி வருகிறது. அதாவது பா ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களை பார்த்ததே இல்லை எனக் கூறியுள்ளார். அவர்கள் படங்களை பார்க்கக் கூட எனக்குத் தோன்றியதில்லை.
ஆனால், மோகன் ஜி இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேன்; நாடகக் காதல் ரெஃபரன்ஸ்க்காக அவரது படங்களை பார்ப்பேன் என ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனை வைத்து இயக்குநர் ரஞ்சித்தை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பா ரஞ்சித்தின் அட்டக் கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அனைத்துப் படங்களும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், மாரி செல்வராஜ்ஜின் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றியை பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களது படங்களுக்கு முன்னால் மோகன் ஜி இயக்கிய ஒரு படத்தை கூட உதாரணமாக சொல்ல முடியாது.
மோகன் ஜி படங்கள் ரசிகர்களிடம் எப்படியெல்லாம் மொக்கை வாங்கியது என ரஞ்சித்துக்கு தெரியாதா. மோகன் ஜி படங்களே வெற்றிப் பெறாத நிலையில், அதனை ரெஃபரன்ஸாக வைத்து ரஞ்சித் படம் இயக்குவதை நினைத்தால் காமெடியாக தான் இருக்கிறது. கவுண்டம்பாளையம் எப்போது ரிலீஸானாலும் அந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்காது என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
What's Your Reaction?