“சாவுக்கு துணிஞ்சா மட்டும் தான் இங்க வாழ்க்கை” விக்ரமின் தங்கலான் ட்ரெய்லர்... ரசிகர்கள் ரியாக்ஷன்!

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரெய்லருக்கு, ரசிகர்களிடம் எப்படி வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.

Jul 10, 2024 - 17:58
“சாவுக்கு துணிஞ்சா மட்டும் தான் இங்க வாழ்க்கை” விக்ரமின் தங்கலான் ட்ரெய்லர்... ரசிகர்கள் ரியாக்ஷன்!
Thangalaan Trailer

சென்னை: சீயான் விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் தங்கலான். இக்கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த போது தங்கலான் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதனால் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே மிகப் பெரிய ஹைப் காணப்பட்டது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் விக்ரம் உடன் நடித்தனர். 

கேஜிஎஃப் தங்கச் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தங்கலான் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேக்கிங், விஷுவல், விக்ரம் கெட்டப் என அனைத்திலும் வித்தியாசமாக உருவாகியுள்ளது இந்த ட்ரெய்லர். நிலத்திற்குள் புதைந்திருக்கும் தங்கத்தை தேடி வரும் ஆங்கிலேயருக்கு, அம்மண்ணின் பூர்வக்குடிகள் உதவி செய்ய போகின்றனர். அப்போது அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்க, அதனை எதிர்கொண்டால் மட்டுமே பூமியில் உள்ள தங்கத்தை எடுக்க முடியும் எனத் தெரிகிறது.  

அதற்காக சீயான் விக்ரமும் அவரது குழுவினரும் போராட, இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. பெண் தெய்வ வழிபாடு, மண்ணை காக்கும் பெண் தெய்வம் என்பதை பின்னணியாக வைத்து தங்கலான் படம் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம் பா ரஞ்சித்தின் மேஜிக்கல் டச் இந்தப் படத்தில் இருக்குமா எனத் தெரியவில்லை என்பதாகவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். காலா படத்தில் நில அரசியல் குறித்து பேசியிருந்தார் பா ரஞ்சித். அதேபோன்றதொரு கருவில் தங்கலான் உருவாகியிருக்கும் எனவும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

இதனிடையே தங்கலான் ட்ரெய்லரில் சீயான் விக்ரமின் கெட்டப், அவரது நடிப்பு மிரட்டலாக உள்ளது. அதேபோல், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையில் ஒவ்வொரு காட்சியும் கூஸ்பம்ஸ்ஸாக அமைந்துள்ளது. அதேபோல், ட்ரெய்லரிலேயே வசனங்களில் தெறிக்கவிடும் பா ரஞ்சித், தங்கலான் படத்தில் அந்தளவுக்கு ஸ்கோர் செய்யவில்லை எனவும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். “சாவுக்கு துணிஞ்சவங்களுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை” என்ற வசனம் மட்டுமே ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது. 

தங்கலான் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆகஸ்ட் 15ம் தேதி தங்கலான் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதும் உறுதியாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow