மிதக்கும் பாலம் உடைந்து கடலில் விழுந்த மக்கள்...15க்கும் மேற்பட்டோர் படுகாயம்...2 பேர் கவலைக்கிடம்...

திறக்கப்பட்ட மூன்றே மாதங்களில் மிதக்கும் பாலம் உடைந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.

Mar 9, 2024 - 20:42
மிதக்கும் பாலம் உடைந்து கடலில் விழுந்த மக்கள்...15க்கும் மேற்பட்டோர் படுகாயம்...2 பேர் கவலைக்கிடம்...

கேரள மாநிலம் வர்க்கலாவில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் பாலம் உடைந்து 15-க்கும் கடலில் விழுந்தனர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை பகுதிக்கு நாள்தோறும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும், கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் பாலத்தில் நடந்து சென்று கடல் அழகை ரசிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று (மார்ச் 9) சுற்றுலா பயணிகள் மிதக்கும் பாலத்தில் நடந்து சென்று கடலை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பாலம் உடைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் கடலில் விழுந்தனர். இதையடுத்து அங்கிருந்த கடலோர காவல்படையினர் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடலுக்குள் 100 மீட்டர் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை நடக்க முடியும். கடந்தாண்டு டிசம்பர் 25-ம் தேதி திறக்கப்பட்ட மிதக்கும் பாலம் மூன்றே மாதங்களில் உடைந்து போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow