ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்.. 19ல் வாக்குப்பதிவு.. தீர்ப்பு எழுதப்போகும் வாக்காளர்கள்

Apr 17, 2024 - 18:14
ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்.. 19ல் வாக்குப்பதிவு.. தீர்ப்பு எழுதப்போகும் வாக்காளர்கள்

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பரப்புரை ஓய்ந்துள்ளது. 

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், 39 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்தன. 

இந்த நிலையில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர். 

இதனிடையே பரப்புரை நிறைவடைந்த பிறகு யாரும் எந்த வகையிலும் வாக்கு சேகரிக்க கூடாது எனவும் வாக்காளா்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

பல திருப்பங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், எந்தக் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மக்களவைத் தொகுதிகள்

1. அருணாச்சல பிரதேசம் 2 தொகுதிகள்
2. அஸ்ஸாம் 5 தொகுதிகள்
3. பீகார் 4 தொகுதிகள்
4. சத்தீஸ்கர் 1 தொகுதி
5. மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள்
6. மகாராஷ்டிரா 5 தொகுதிகள்
7. மணிப்பூர் 2 தொகுதிகள்
8. மேகாலயா 2 தொகுதிகள்
9. மிசோரம் 1 தொகுதி
10. நாகாலாந்து 1 தொகுதிகள்
11. ராஜஸ்தான் 12தொகுதிகள்
12. சிக்கிம் 1 தொகுதி
13. தமிழ்நாடு 39 தொகுதிகள்
14. திரிபுரா 1 தொகுதி
15. உத்தரப்பிரதேசம் 8 தொகுதிகள்
16. உத்தரகாண்ட் 5 தொகுதிகள்
17. மேற்கு வங்காளம் 3 தொகுதிகள்
18. அந்தமான் நிகோபார் 1 தொகுதி
19. ஜம்மு-காஷ்மீர் 1 தொகுதி
20. லட்சத்தீவு 1 தொகுதி
21. புதுச்சேரி 1 தொகுதி

மக்களவை தேர்தல் நாளில் வாக்காளர்கள் தீர்ப்பு எழுதப்போகின்றனர். வரும் மே ஜூன் 2ஆம் தேதி வரைக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதியன்று மக்கள் எழுதிய தீர்ப்பு தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow