"என் உயிருக்கு ஆசைப்படுகிறது பாஜக" - மமதா பானர்ஜி அனல் பறக்கும் பேச்சு

எனக்கு மாரடைப்பு வர வேண்டும் என பாஜக ஆசைப்படுகிறது. உங்கள் அரசியல் வீழ்ச்சியை பார்க்கும் வரை உயிரோடுதான் இருப்பேன் என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Jul 16, 2026 - 11:53
Jul 16, 2026 - 12:08
"என் உயிருக்கு ஆசைப்படுகிறது பாஜக" - மமதா பானர்ஜி அனல் பறக்கும் பேச்சு

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தோல்விக்கு பிறகு தற்போது பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.  ஆனால் மமதா பானர்ஜி தற்போது காங்கிரசின் ஆதரவை தேடி வரும் நிலையில்,பாஜக தன் உயிருக்கு ஆசைப்படுகிறது என்று பாஜகவின் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில்  2021 சட்டசபை தேர்தலில் 293 தொகுதிகளில் 215 இடங்களில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் 2026 தேர்தலில் வெறும் 80 இடங்களில் தான் வென்றது. 207 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது பாஜக. சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் நிலைகுலைந்து மம்தாவின் தலைமைக்கு எதிராக கட்சி பிளவுப்பட்டது.

58 எம்எல்ஏக்கள் தணி அணியாகப் பிரிந்தனர். இதேபோல் திரிணமூல் காங்கிரசின் மக்களவை எம்பிக்கள் 29 பேரில் 19  எம்பிக்கள் தனியாகப் பிரிந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூடடணிக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். இந்நிலையில் உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம் என  மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜி  முகநூல் நேரலையில் பேசி உள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

தனது அரசியல் சித்துவிளையாட்டுகள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தீவிரமாக மூக்கை நுழைத்து வருகிறது. தமது கட்சியின் உள்ளே தற்பொழுது நிலவி வரும் கடுமையான உட்கட்சிப் பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்குப் பின்னால் முழுமையாக பா.ஜ.க-வின் சதித்திட்டம் மட்டுமே ஒளிந்திருக்கிறது. கட்சித் தொண்டர்களை குழப்பி பிளவுகளை ஏற்படுத்த டெல்லி தலைமை சதிவலை பின்னுகிறது.

இத்தகைய சதிவேலைகளுக்குத் திரிணாமுல் தொண்டர்கள் ஒருபோதும் பலியாக மாட்டார்கள் கற்பிப்பார்கள். ஜனநாயக ரீதியில் பா.ஜ.க-விற்கு உரியப் பாடத்தை மக்கள் விரைவில் உடல்நிலை பாதிப்பு கடந்த சில வாரங்களாகத் தமக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த முகநூல் நேரலை அமைந்திருந்தது.

"எனது உடல்நிலை குறித்து திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி எனது ஆதரவாளர்களை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள்; எனக்கு எதுவும் ஆகாது, மக்களின் ஆசியும் பேராதரவும் எனக்கு இருக்கும் வரை என்னை யாராலும் அசைக்க முடியாது.

எனக்கு மாரடைப்பு வர வேண்டும் என பாஜக ஆசைப்படுகிறது. உங்கள் அரசியல் முடிவை பார்க்கும் வரை உயிரோடுதான் இருப்பேன். பா.ஜ.க-வின் வீழ்ச்சியை நேரில் பார்க்கும் வரை தமது அரசியல் போராட்டம் களத்தில் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.

 மம்தா பானர்ஜியின்  பாஜகவிற்கு எதிராக அனல் பறக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow