பெண்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமையட்டும் - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகளிர் தின வாழ்த்து!
பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து, பாலின சமத்துவத்திற்காக அவர்கள் எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டும் விதமாக மகளிர் தினத்தை கொண்டாடுவோம் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த நாளை அனைத்து துறைகளிலும் சாதனை படைத்துவரும் பெண்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது பாடுபட்டு வரும் பெண்களுக்கு சமர்ப்பிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் அனைத்துவிதமான தளங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். மேலும், பெண்கள் விளையாட்டு, அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், ராணுவம் எனப் பல துறைகளிலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக இன்றைய நாளில் வாழ்த்துவதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?