Meesaya Murukku 2 Review – மீண்டும் ஹிப் ஹாப் ஆதி...குடும்பத்தோடு ரசிக்கலாமா?

மூன்று தலைமுறைகளின் கனவு, கானா பாடலுக்கான அங்கீகாரம், சமூகத் தடைகள் என நகைச்சுவையுடன் பயணிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ ரசிகர்களை கவர்கிறதா?

Sep 27, 2026 - 11:00
Meesaya Murukku 2 Review – மீண்டும் ஹிப் ஹாப் ஆதி...குடும்பத்தோடு ரசிக்கலாமா?
meesaya murukku 2 review
மீசைய முறுக்கு 2 
குடும்பத்தோடு பார்த்து கொஞ்சம் சிரிக்க, கொஞ்சம் சிந்திக்க தமிழில் படங்கள் வருவது அரிதாகி விட்டது... அப்படி வந்த படங்கள் எல்லாமே சிறிய படங்கள் என்றாலும் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன, அந்த வகையில் இதுவும்..? மூன்று தலைமுறைகள் வாழ்க்கையில் தங்கள் கனவுகளை அடைய  எப்படி போராடுகின்றன? முடிவு என்ன? என்பதுதான் கதை... 
கானா பாடலுக்கு ஒரு கலை அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அதன் மூலம் தங்களுக்கு ஒரு பெயர் கிடைக்க வேண்டும் என்று தாத்தா, மகன், பேரன் என மூன்று தலைமுறையாக ஆதி போராடுகிறார்... முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்...
அழுத்தமான கதையை, ஆபாசம் கலக்காத நகைச்சுவையுடன் அர்த்தமுள்ள வசனங்களுடன், குழப்பமில்லாத திரைக்கதை மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் எழுத்தாளர், இயக்குநர் ஆதி... படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் பலம், இதம்... அதுவும் ஹிப் ஹாப் ஆதி... 
சாதிக்க நினைப்பவன் நெபோடிசம், சாதி, மதம், ஏழை, பணக்காரன் ஏற்ற தாழ்வு என எல்லா தடைகளையும் தாண்டி தான் ஜெயிக்க வேண்டும் என்பதை யதார்த்தமாக, அதன் பின்  இருக்கும் சமூக நியாயத்துடன்  காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. 
கருணாஸ், பாபா பாஸ்கர், ஆதி, யோகி பாபு, ஷா ரா கூட்டணி இடைவேளுக்கு பின் செம கலக்கல். சைத்ரா ஆர்ச்சர், ரம்யா ரங்கநாதன் கெடிகா சர்மா என ஆதிக்கு மூன்று ஜோடிகள்... மூன்று பேரும் மூன்று தலைமுறையை சேர்ந்த மூன்று விதமான பெண்கள் அவர்கள் தங்கள் கணவன் மற்றும் காதலனின் லட்சியத்துக்கு எப்படி துணை நிற்கிறார்கள் என சொல்லியிருக்கும் விதம் கவிதை... 
இவர்களை தவிர நாசர், ஆடுகளம் நரேன், பகவதி, ஹர்ஷத் கான், கருணாகரன் மனதில் நிற்கிறார்கள். படத்தில் கத்தி, துப்பாக்கி, இரத்தம் ஆறாக ஓடாமல்  இருப்பதே பெரிய ஆறுதல்...
திடீரென ஜென்ஸி ஆதி பொறுப்பான பூமராக மாறி, ஃபுட் டெலிவரி பாயாக அவமானங்களை அமைதியாக ஏற்றுக் கொண்டு கடந்து போவது  கொஞ்சம் செயற்கை... கருணாகரன் ஏன் காணாமல் போனார்? 
மீசைய முறுக்கு 2 - மீண்டும் ஹிப் ஹாப் ஆதி
3 ஸ்டார்
(இளையரவி)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow