ஆட்டம் காட்டும் தங்கம் - சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.93,760
தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் அடைந்துள்ளது.
தங்கம் நேற்று விலை குறைந்து இருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போல வெள்ளியும் கிராமுக்கு ரூ 3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.174க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கும் வந்தது.அதன் பின்னரும், விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. அதிலும் இந்த மாதம் கடந்த 13-ந்தேதி விலை அதிகரித்து வந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்து, பிறகு விலை குறைந்தது.
இன்று (நவ.,25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 174க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்து இருப்பது மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.
What's Your Reaction?

