திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... மாமூல் தராத நபரை சிக்க வைக்க சித்து வேலை

திருப்பத்தூரில் நகர காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mar 13, 2024 - 21:13
திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... மாமூல் தராத நபரை சிக்க வைக்க சித்து வேலை

திருப்பத்தூரில் நகர காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் (மார்ச் 11) வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், "நான் பெரியாங்குப்பம் கீழ்காலனி பகுதியைச் சேர்ந்த ராஜா. நான் பிரியாணி கடை வைத்ததில் மன உளைச்சலில் இருக்கிறேன். இதனால் எஸ்.பி அலுவலகத்திலும், ஆம்பூர் நகர காவல் நிலையத்திலும், டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் குழு ஆம்பூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ராஜா என்பவரை ஆம்பூர் நகர காவல் நிலைய போலீசார் அழைத்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அழகாபுரி பகுதியில் பிரியாணி கடை வைப்பதற்கு அந்தப் பகுதி கவுன்சிலர், மாதம்  ரூ.5000 தனக்கு வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கடை நடத்த முடியாது என பிரச்னையில் ஈடுபட்டதும். இதனால் கடையை நடத்த முடியாமல் ராஜா மூடிய நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் சேகர் உள்ளிட்ட சிலரை ஆம்பூர் நகர காவல் நிலைய போலீசார் எச்சரித்து அனுப்பியதும் தெரியவந்தது. இந்த முன்விரோதம் காரணமாக ராஜா பெயரில் யாரேனும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow