மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் உயர்ந்து தற்போது ஒரு சவரன் ஆபரத்தத்தங்கம் 56,960 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக ஒரு கிராம் தங்கம் 7,120 ரூபாய் என்கிற கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவு சமீப காலத்தில் தங்கத்தின் விலை விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தங்கம் என்பதுதான் பலரது சேமிப்பாக இருக்கிறது. இப்படியிருக்க கூடிய விரைவில் ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரம் ரூபாயை நெருங்கி விட்டது. கடந்த வாரம் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை ஒரு சவரன் 56,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு தங்கத்தின் விலை பெயரளவுக்குக் குறைந்தாலும் மீண்டும் ஏறத்தொடங்கியிருக்கிறது. தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56,960-க்கும், ஒரு கிராம் ரூ. 7,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, 24 கேரட் தங்கத்தின் விலை சரவனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 62,136 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,767 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 103 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை 1,03,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?






