தமிழகத்தில் மதுவிலக்கு..அமைச்சர் கொடுத்த வாக்கு!

பூரண மது விலக்கு என்பது தங்களது லட்சியம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Oct 6, 2024 - 21:50
தமிழகத்தில் மதுவிலக்கு..அமைச்சர் கொடுத்த வாக்கு!

பூரண மது விலக்கு என்பது தங்களது லட்சியம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அகரப்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் அங்கன்வாடி மைய கட்டிடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் சாத்தியமே என்று தான் கூறினோமே தவிர, பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணம்"

”மதுவிலக்கை மத்திய அரசுதான் அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோமே தவிர நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்த மாட்டோம் என்று கூறவில்லை.

சென்ற தேர்தல் வாக்குறுதியில் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று கூறினோம். அதன்படி 500 கடைகளை மூடியுள்ளோம். பூரண மதுவிலக்கு உடனடியாக கொண்டு வருவோம் என்று நாங்கள் கூறவில்லை.பூரண மதுவிலக்கு என்பது எங்களது லட்சியம். படிப்படியாக குறைப்பது என்பது எங்களுடைய நிச்சயம்.”

”அரசியல் கட்சி தொடங்கும் அனைவருமே கூறும் கருத்துக்களை தான் நடிகர் விஜய்யும் கூறுகிறார். நாங்கள் எங்கள் பாதையில் மிகத் தெளிவாக உள்ளோம் பயணத்தில் தெளிவாக உள்ளோம்.  இலக்கில் தெளிவாக உள்ளோம்.  2026 எங்களுடைய இலக்கு 200 சீட். 234 லட்சியம் 200 நிச்சயம். எங்களிடம் நேரடியாக யாரும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. அனைத்து கூட்டணி கட்சிகளும் தலைவர்களும் அன்போடும் பாசத்தோடும் உள்ளனர்.” என தெரிவித்தார்.

மேலும், “பூரண மதுவிலக்கு என்பது இந்தியா முழுவதுமாக கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம். இருப்பினும் தமிழக முதல்வர் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரக்கூடிய நடவடிக்கையை முதல்வர் நிச்சயம் எடுப்பார்.”

”ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்களும் தான் கேட்கிறோம். தேர்தல் அறிக்கையிலே நாங்கள் கூறியுள்ளோம்.  தமிழக அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது. மத்திய அரசு தான் நடத்த முடியும். சென்சஸ் என்பது மத்திய அரசு பட்டியலில் உள்ளது ” என அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow