விமான சாகச நிகழ்ச்சியில் சோகம்... எகிறும் பலி எண்ணிக்கை
சென்னையில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சியை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதன்மூலம், இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற புதிய சாதனையை சாகச நிகழ்ச்சி படைத்துள்ளது. விமானப் படையினரின் இந்த சாகச நிகழ்ச்சி முடிந்ததும், மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்டதால் மெரினாவை ஒட்டியுள்ள சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த கூட்ட நெரிசலில் 200-க்கும் மேற்பட்டோர் மயக்கம், உடற்சோர்வு அடைந்த நிலையில், பலர் முதலுதவி சிகிச்சைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மயக்கமடைந்தும், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் கவலைக்கிடமான நிலையில், 93-க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், குரோம்பேட்டையை சேர்ந்த சீனிவாசன், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ்குமார் என்பவர் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
What's Your Reaction?