பாகிஸ்தானுக்கு எதிரான டி20..கலக்கிய இந்தியாவின் சிங்கப்பெண்கள்..
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் இரு பிரிவுகளாக கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.
அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஷபாலி வர்மா 32 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 18 புள்ளி 5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
What's Your Reaction?