பாஜக பிரமுகர் கடத்தல்... காரணம் இதுதானா..! தீவிர விசாரணையில் போலீஸ்

குடியாத்தத்தில் பாஜக பிரமுகரை கடத்திய 2 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாஜக பிரமுகர் கடத்தல்... காரணம் இதுதானா..! தீவிர விசாரணையில் போலீஸ்

குடியாத்தத்தில் பாஜக பிரமுகரை கடத்திய 2 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த டேவிட் சுகுமார் அதே பகுதியில் இன்ஃபினிட்டி எனும் உணவகம் நடத்தி வருகிறார். இவர் பாஜகவை சேர்ந்தவர். சில தினங்களுக்கு முன்பு காந்திநகர் பகுதியில் சரவணன் என்ற நபரிடம் பேசிக் கொண்டிருந்த டேவிட் சுகுமாரை காரில் வந்த சில மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

கடத்தியதோடு மட்டுமல்லாமல், சரவணன் மற்றும் டேவிட் சுகுமார்  குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். கணவர் கடத்தபட்டது குறித்து மனைவி சுகுணா குடியாத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்

புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார்  வாகன தணிக்கை செய்து வந்த நிலையில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்ட காவல் துறையினரும் பாஜக பிரமுகரை கடத்திய மர்மநபர்களை  தீவிரமாக தேடி வந்தனர். இதனை அறிந்த கடத்தல் காரர்கள் பாஜக பிரமுகர் டேவிட் சுகுமாரை திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பினர்.

இந்த தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் வேலூர் பேருந்து நிலையத்திற்கு சென்று டேவிட் சுகுமாரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டத்தில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்த நபர்கள் கடத்தி மூன்று கோடி பணம் கேட்டு மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம்  செய்யார் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(23வயது), மணிகண்டன்(வயது22) இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கடத்தலில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை தவிர்த்து, பின்னால் இருக்கும் கும்பலை குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

பணத்திற்காக பாஜக பிரமுகர் டேவிட் சுகுமாரை கடத்தி மீண்டும் காவல்துறையினருக்கு பயந்து பேருந்தில் அனுப்பி வைத்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow