"மழை பாதிப்பு பணி.. உதயநிதி மட்டுமே ஈடுபல..நாங்களும்..’ - பட்டென சொன்ன அமைச்சர் சேகர்பாபு
சென்னை மழை பாதிப்பு பணியில் துணை முதலமைச்சர் மட்டும் ஈடுபடவில்லை, அவருக்கு உதவியாக அனைத்துத்துறை அமைச்சர்களும் பணி செய்தாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மழை பாதிப்பு பணியில் துணை முதலமைச்சர் மட்டும் ஈடுபடவில்லை, அவருக்கு உதவியாக அனைத்துத்துறை அமைச்சர்களும் பணி செய்தாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடைபெற உள்ள திருமண விழாக்களை முன்னிட்டு மனமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமைதாங்கி மணமக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சித்தர்களுக்கு விழா எடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்றார். மழை குறித்து பேசிய அவர், பதவிக்கு வந்ததும் துணை முதலமைச்சருக்கு பெருமழை சவாலாக அமைந்ததாகவும், அந்த பெருமழையை திறமையாக துணை முதலமைச்சர் சமாளித்து மக்கள் பாராட்டி வருவதாகக் கூறினார்.
உதயநிதியை மட்டும் முன்னிலைப்படுத்துவது ஏன் ஏன எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னை மழை பாதிப்பு பணியில் துணை முதலமைச்சர் மட்டும் ஈடுபடவில்லை, அவருக்கு உதவியாக அனைத்துத்துறை அமைச்சர்களும் பணி செய்தாகக் கூறினார்.
மேலும், ”தமிழ்நாடு முழுவதும் 11 திருக்கோயில்களில் முழு வேலை அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 20 திருக்கோயில்களில் கட்டணம் இல்லாமல் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. சித்தர்களுக்கு விழா எடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
திருக்கோயில்களின் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில தான் மகாசிவராத்திரி விழா திமுக ஆட்சியில் தான் முதல் முதலில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் புதிதாக இந்த ஆண்டு இரண்டு திருக்கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்பட உள்ளது. 1020 பேர் அறுபடை வீடுகளில் கட்டணம் இல்லாத தரிசனத்தை பெற்றுள்ளனர்”, எனவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?