காற்றழுத்த தாழ்வு பகுதி..தமிழகத்துக்கு பாதிப்பு இருக்கா? என்ன சொல்கிறார் வெதர்மேன்?
வங்க கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்க கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலன இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் மெல்ல மெல்ல மழைநீர் வடிந்ததால் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
இதையடுத்து தாழ்வு மண்டலம் ஆந்திரா அருகே நேற்று கரையை கடந்தது. இந்த நிலையில், வடக்கு அந்தமான் கடற்பகுதியில் வரும் 22-ம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்பதால் கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகாவில் மிதமான மழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலங்கானாவில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
மேலும் நவம்பரில் எங்கெங்கு மழை அதிகம் பெய்யும் என்பது அப்போது நிகழும் வானிலை நிகழ்வுக்கு முன்தான் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?