சர்ச்சைகளுக்கு மத்தியில் வசூலில் அசத்திய எம்புரான்.. ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஆன லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2E:எம்புரான் கடந்த மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடி வரும் நிலையில், இப்படத்தின் ஓடிடி குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மோகன்லால், மஞ்சு வாரியார்,பிருத்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, இந்தி, தமிழ் உட்பட 5 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகமான லூசிஃபர் படம் மலையாளம் மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது.
அதனால், L2E:எம்புரான் படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. இருப்பினும் எம்புரான் படத்தில் இடம்பெற்ற ரயில் எரிப்பு சம்பவம், முல்லை பெரியாறு தொடர்பான சர்ச்சைக்குரிய வசனங்களால் படம் இந்தியளவில் பேசுப்பொருளாகியது. பான் இந்தியா படமாக வெளியாகிய எம்புரான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்ற நிலையிலும், பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டது.
இந்நிலையில் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தினை முந்தியுள்ளது எம்புரான் திரைப்படம். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பினை பெற்றது. மஞ்சுமல் பாய்ஸ் 72 நாட்கள் திரையில் ஓடியது. அதன் மொத்த வசூலை வெறும் 10 நாட்களில் முறியடித்துள்ளது எம்புரான் திரைப்படம். 30 நாட்களில் 325 கோடி ரூபாயினை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இப்படம் வருகிற 24 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடா மொழிகளில் எம்புரான் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வசூல் சாதனை: மலையாள திரையுலகின் டாப் 10 திரைப்படங்கள்
எம்புரான்
மஞ்சுமல் பாய்ஸ்
2018
ஆடுஜீவிதம்
ஆவேஷம்
புலிமுருகன்
பிரேமலு
லூசிபர்
அஜயந்தேரண்டம் மோசனம்
மார்கோ
What's Your Reaction?






