குளித்தலை மருத்துவமனையில் மின்தடை..பச்சைக் குழந்தைகளுடன் மரத்தடிக்கு வந்த தாய்மார்கள்..

May 1, 2024 - 18:05
குளித்தலை மருத்துவமனையில் மின்தடை..பச்சைக் குழந்தைகளுடன் மரத்தடிக்கு வந்த தாய்மார்கள்..

குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குளித்தலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இங்குள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு தாய் சேய் மற்றும் சிசு பராமரிப்பு மையம் மூலம் ஏராளமான தாய்மார்கள் பயனடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில், மருத்துவமனையில் இன்று (மே 1) திடீரென மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். வெயில் கொளுத்தும் நிலையில் மின்தடை காரணமாக அறைக்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தாய்மார்கள் பச்சைக் குழந்தைகளுடன் மருத்துவமனை வளாகத்திலும் மரத்தடியிலும் பாதுகாப்பற்ற வகையில் அமரும் அவலமும் நிலவியது. 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கோடை காலம் என்பதால் நோயாளிகள் மற்றும் தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow