NEET வினாத்தாள் முறைகேடு: நாடு தழுவிய போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு

NEET வினாத்தாள் முறைகேட்டுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் ஜூலை 24 அன்று நாடு முழுவதும் ஒருநாள் போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Jul 23, 2026 - 17:35
NEET வினாத்தாள் முறைகேடு: நாடு தழுவிய போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு

நீட் வினாத்தாள் முறைகேடுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான் பூச்சி கட்சி கடந்த 20 நாட்களுக்கு மேலாக போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கரப்பான் பூச்சி கட்சி சார்பாக நாளை ஜுலை 24 நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லியில் கடந்த ஜுன் 28 ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய நிலையில் டெல்லி காவல்துறையினர் அவரை வலுக்கட்டயமாக அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காமல் தொடர்ந்து 25 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரத போரட்டத்தை கடைபிடித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் எதிர்ப்பு போராட்டம் என்பது தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது கரப்பான் பூச்சி கட்சியினர் ஒரு அழைப்பு விடுத்துள்ளனர்.நாளை (24.07.2026) நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இந்த போராட்டம் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், இந்தியா முழுவதும் காவல் துறையினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இந்தப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்திய அமைதிப்பேரணியில் பங்கேற்றவர்கள் மீது டெல்லி காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பெண்கள் உள்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகத் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன், டெல்லியில் நடைபெறும் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow