நீட் போராட்டம்: நள்ளிரவில் பிரதமர் வெளியிட்ட வீடியோ..!
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் முறைகேடுக்கு எதிராகவும் அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டியும் கரப்பான் பூச்சி கட்சி சார்பாக டெல்லியில் ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
தற்போது இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணியும் இந்த விவகாரத்தில் கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் பதவி விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினந்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.
நமது இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் கடுமையான தண்டனையை உறுதி செய்வதாக கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
What's Your Reaction?