பெங்களூரு குண்டு வெடிப்பு - தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்...NIA பக்கா ப்ளான்...

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முஸம்மில் ஷரீப்பை நேற்று கைது செய்யப்பட்டார்.

Mar 29, 2024 - 21:11
Mar 29, 2024 - 21:13
பெங்களூரு குண்டு வெடிப்பு - தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்...NIA பக்கா ப்ளான்...

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிப்பதாக தேசிய பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒய்ட்ஃபீல்டு 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்தது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இவ்வழக்கு தேசிய பாதுகாப்பு முகமையினர் வசம் சென்றது. இதற்கிடையில் உணவகத்தில் வெடித்தது மர்மமான வெடிகுண்டுதான் என்று வெடிகுண்டு செயலிழப்புப் படை உறுதி செய்தது. மேலும், வெடிகுண்டு வைத்துவிட்டுச் சென்றவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதனைக் கொண்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனடைப்படையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 18 இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முஸம்மில் ஷரீப்பை நேற்று (மார்ச் 28) கைது செய்தனர். மேலும், அவருடன் தொடர்புடையவர்களைத் தேடி வந்தனர். 

இந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் மதீன் அகமது தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோரின் புகைப்படங்களை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.  [email protected] மற்றும் 080-29510900, 8904241100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவ்வாறு தெரிவிப்பவர்களின் விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow