”அதிமுக இருக்கனும்னா இது நடந்தே ஆகனும்..” – ஹிண்ட் கொடுத்த அமைச்சர்..!

அதிமுக இருக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி இதைச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளது எடப்பாடியார் அண்ட் கோ-வை கொதிப்படையச் செய்துள்ளது.

Jul 2, 2026 - 15:17
Jul 2, 2026 - 15:42
”அதிமுக இருக்கனும்னா இது நடந்தே ஆகனும்..” – ஹிண்ட் கொடுத்த அமைச்சர்..!

சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள சட்ட பள்ளி மாணவர் விடுதிக்கு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அமைந்து 15 ஆண்டுகள் கழித்து மாணவர் விடுதி கட்டி தர முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும் , தமிழ்நாட்டில் பெண்களுக்கு பிரத்தியேகமாக சட்டக் கல்லூரி உருவாக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

மேலும், “முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு திருமண நிகழ்விற்குச் சென்று தவெக ஆட்சி முப்பது நாட்களில் கவிழும் என்று பேசுகிறார் , அப்படி என்றால் 30 நாட்களில் ஸ்டாலின் மிகப்பெரிய தலைவர் ஆகிவிட்டாரா? ஐந்து ஆண்டுகள் எதுவும் செய்யாத காரணத்தால் தான் திமுக ஆட்சியை அகற்றி தமிழ்நாடு மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாய்ப்பு வழங்கினர். மக்கள் ங்களோடு இருக்கின்றனர். தமிழக வெற்றி கழகம் 120 எம்எல்ஏக்களோடு வலுவாக உள்ளது” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், நடிகர் முதல்வர் ஆகலாமா என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது. நடிகர் முதல்வர் ஆகலாமா என்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து கொண்டு கூறலாமா என கேள்வி எழுப்பினார். மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவை ஆரம்ப காலத்தில் திமுக எப்படி விமர்சித்ததோ அதைத்தான் தற்போது முதல்வர் விஜயை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த விமர்சனம் செய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் கிடையாது என்றார். மேலும் திமுக எழுதிக் கொடுப்பதை எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும் அதிமுகவிற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியிலிருந்து விலக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow