தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக... 10 தொகுதிகளை அள்ளிக்கொடுத்த பாஜக...

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் அண்ணாமலை கூறினார்.

Mar 19, 2024 - 11:59
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக... 10 தொகுதிகளை அள்ளிக்கொடுத்த பாஜக...

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது மட்டும் பின்னர் அறிவிக்கப்படும்  என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

2024 நாடளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த நிலையில், பாமக, அதிமுகவுடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று பாஜகவுடன் கூட்டணி என்று பாமக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. 

இன்று (19.3.2024) அதிகாலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பாமக நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டம் சென்றனர். அங்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.  

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்,"3-வது முறையாக மோடி பிரதமராவார் என்றும், தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது. எங்கள் கூட்டணி இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றிபெறும்" என்றார். அதன் பிறகு பேசிய அண்ணாமலை, ”பாமக நிறுவனர் ராமதாஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவராக இருக்கப் போகிறார். அவருக்கு முழு மரியாதை  கொடுக்க வேண்டியது பாஜகவின் கடமை. பாமக போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow