வெயில் தாக்கம் : ஒடிசாவில் பள்ளி நேரத்தில் மாற்றம்
வெப்பநிலையை கண்காணித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி.
ஒடிசா மாநிலத்தில் வெப்பநிலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், உலகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் வெப்பநிலையின் அளவு 2-3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்பு நேரத்தில் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 7 மணி முதல் 11.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் எனவும் இந்த நடைமுறை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் ORS கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து சூழ்நிலைக்கு ஏற்ப வழிமுறையை மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?