Lebanon : விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தபோது விபரீதம்... இஸ்ரேலில் ஹிஸ்புல்லா தாக்குதலில் கேரள நபர் பலி!
பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்தியா தடையின்றி உதவி செய்யும் என்று இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு
இஸ்ரேலின் லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியான நிலையில், பலர் படுகாயமடைந்தனர். இதற்கிடையில் இஸ்ரேலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மற்றொரு பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவும், சரமாரி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், லெபானனில் அண்மையில் ஹிஸ்புல்லா பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பதிவில், வடக்கு இஸ்ரேலில் உள்ள மார்கோலியட்டில், விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் மீது ஹிஸ்புல்லா அமைப்பிர் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒரு இந்தியர் பலியானதோடு இருவர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. காயமடைந்த நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேலுக்கான இந்தியத் தூதரகம், பயங்கரவாதத் தடுப்பில் இந்தியா தீவிரமாக இருப்பதாகவும், அதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு தடையின்றி உதவி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் என்ற நபர், பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?