விரைவில் புதிய செயலி... ஓலா, உபருக்கு மாற்றாகக் களமிறங்கும் அரசு!

ஓலா, உபருக்கு மாற்றாக புதிய செயலியுடன் தமிழக அரசு களமிறங்க உள்ளது.

Mar 5, 2024 - 11:55
விரைவில் புதிய செயலி... ஓலா, உபருக்கு மாற்றாகக் களமிறங்கும் அரசு!

தமிழ்நாட்டில் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவன செயலிக்கு மாற்றாக, புதிய செயலியைக் கொண்டு வர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அரசு போக்குவரத்து துறை சார்பில் ஸ்டார்ட் அப் டிஎன் என்ற செயலியை உருவாக்கியுள்ளது.


இந்த செயலி தொடர்பாக ஏற்கனவே போக்குவரத்துத்துறை துணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இதில் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், செயலி உருவாக்கும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தோர் கலந்துகொள்கின்றனர்.  

இந்த பேச்சு வார்த்தையில், ஆட்டோக்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டணத்திற்கு பதிலாக குறைந்தபட்ச கட்டணமாக ஒரு கிலோமீட்டருக்கு ரூ.50-ம், அதற்கு மேல் கிலோமீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை குறித்தும், ஆட்டோ செயலி பயன்பாட்டிற்குச் சேவை கட்டணம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு, பின்னர் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow