நினைத்தாலோ போதும்...ட்வீட் தானா விழும்...எலான் மஸ்க்கின் முயற்சி வெற்றி..
டெலிபதி சாதனத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் பதிவு என நியூரோலிங்க் மூலம் மூளையில் சிப் பொருத்தப்பட்டவரின் ட்வீட்டை எலான் மஸ்க் ரீ-ட்வீட் செய்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், நியூராலிங்க் எனப்படும் மனித மூளை - கணினி இடைமுக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மனித சிந்தனை மூலம் கணினியை கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய நோக்கம் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நினைப்பது மற்றும் விரும்பிய செயல்களை செய்வதே ஆகும். இதற்காக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன் மூலம் மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளை பயன்படுத்தி கணினியையும் இயக்க முடியும். ஆனால் எலான் மஸ்க்கின் இந்த முயற்சி பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி, முதுகு தண்டுவட பாதிப்பால் செயல்பட முடியாமல் இருந்த நோலண்ட் அர்பாக் என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூளையில் நியூராலிங்க சிப் பொருத்தப்பட்டது.
இதையடுத்து நோலண்ட் அர்பாக், தனது சிந்தனைகளை பயன்படுத்தி எக்ஸ் தளத்தில் "நான் ஒரு 'AI BOT' என நினைத்து ட்விட்டர் தன்னை தடை செய்ததாகவும், ஆனால் நான் மனிதன் என்பதால் எலான் மஸ்க் இந்த தளத்தில் மீண்டும் தன்னை அனுமதித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை ரீ-ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க்,"நியூராலிங்க் டெலிபதி சாதனம் மூலம் நினைத்ததை பதிவிட்ட முதல் ட்வீட்" என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?