திருவாரூர் போலீஸ் அதிரடி: தொடர்ந்து கைதாகும் ரவுடிகள்

திருவாரூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்யப்பட்டுள்ளார்.

Nov 24, 2023 - 17:04
Nov 25, 2023 - 11:40
திருவாரூர் போலீஸ் அதிரடி: தொடர்ந்து கைதாகும் ரவுடிகள்

திருவாரூரில் தொடர்ந்து ரவுடிகளை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுபடுத்தி பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அவரது  தனிப்படையினர் பல்வேறு குற்ற வழக்குகளை தொடர்புடைய ரவுடிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் மாவட்ட அமமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டனின் சகோதரர் அரவிந்த் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.ரவுடி அரவிந்த் A+ ரவுடி ஆவார்.இவரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது அணியினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்யப்பட்டுள்ளார்.இதுபோன்று ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.இதன்காரணமாக ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow