கோவையில் அறிவுப் புரட்சிக்கு அடித்தளம்...பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் CM VIJAY!

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து, தற்போது நூலகத்தைப் பார்வையிட்டு வருகிறார்.

Oct 16, 2026 - 12:40
கோவையில் அறிவுப் புரட்சிக்கு அடித்தளம்...பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் CM VIJAY!

கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் ரூ.300 கோடி மதிப்பில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 1,98,000 சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வாசகர்களுக்குத் தேவையான பல்வேறு நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் வரவேற்பு அளித்தனர்.

ரோடு ஷோ நடத்திய முதலமைச்சர் விஜய்

விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு சுமார் 10 கி.மீ. தூரம் ரோடு ஷோவாகச் சென்ற முதலமைச்சர் விஜய், வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்களைச் சந்தித்தார். இதற்காக அவினாசி சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, கோவையில் நடைபெறும் அரசு விழாவில் விஜய் முதன்முறையாகப் பங்கேற்பதால், அவரைக் காணவும் வரவேற்கவும் தொண்டர்களும் பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர்.

உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்

கோவை விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவையில் 4,030 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையொட்டி, அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நூலகத்தைத் திறந்து வைத்த விஜய்

இதைத்தொடர்ந்து, காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பின்னர், நூலகத்தின் பதிவேட்டில் தனது பெயரை முதல் நூலக வாசகராகப் பதிவு செய்தார். இதையடுத்து, நூலகத்தில் உள்ள வசதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளை அவர் பார்வையிட்டு வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow