பாஜக வேட்பாளர்கள் பட்டியல்? - மார்ச். 4-ல் முக்கிய முடிவு எடுக்கும் பிரதமர்...

Mar 2, 2024 - 15:58
Mar 2, 2024 - 16:00
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்? - மார்ச். 4-ல் முக்கிய முடிவு எடுக்கும் பிரதமர்...

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 4 ஆம் தேதி சென்னை வருகை தர உள்ள நிலையில்,  மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல்  இறுதி செய்யலாம் என தகவல் கசிந்திருக்கிறது. 

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் தொகுதி பங்கீடு, கூட்டணி என பல்வேறு அரசியல் கட்சியினர் மும்முரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும்  திமுக, அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. அதேபோல் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் திமுக - காங்கிரஸ், திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

இந்நிலையில், வரும் 4 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ள நிலையில் அன்றைய தினம், சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், பொன் ராதா கிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணி வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் டெல்லி திரும்பிய பின்,  தமிழகத்தில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் குறித்தான இறுதிப் பட்டியலை அண்ணாமலை, டெல்லி தலைமையிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow