’5 நாட்களுக்கு கல்லூரி இயங்காது...’ மூடியது மாநிலக் கல்லூரியின் கதவுகள்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: பதற்றமான சூழல் நிலவுவதால் இன்று முதல் மாநிலக் கல்லூரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: பதற்றமான சூழல் நிலவுவதால் இன்று முதல் மாநிலக் கல்லூரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மற்றும் 9 நபர்களை தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலரால் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் என்பவர் தாக்கப்பட்டார்.
கூட்ட நெரிசல் அதிகம் இருக்கக்கூடிய சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் அங்கு இருந்த பொது மக்களால் மீட்கப்பட்டு உடனடியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை சோதனை செய்த மருத்துவர்கள் சுந்தருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு காதில் லேசாக ரத்தம் வடிந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பு அறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாநில கல்லூரி மாணவர் சுந்தர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் கடந்த ஐந்து நாட்களாக இருந்து வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான ஈஸ்வர், யுவராஜ், பிரதீப், சந்துர் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரனை நடத்தி வருவதாகவும் மற்றும் தலைமறைவாக உள்ள 9 மாணவர்வகளை காவல்துறையினர் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பதற்றமான சூழல் நிலவுவதால் இன்று முதல் மாநிலக் கல்லூரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?